ஆசிரமத்தைப் பற்றி...
வேதாத்திரி மகரிஷி சரணம்
நிறைவாக வாழ்க
நீடூழி வாழ்க
பதிவு எண் : 3621/2008
நிறுவனர் : கோ.அழகர் இராமானுஜம்
காரைக்கால் ரோடு, குருங்குளம் (போஸ்ட்) மாங்குடி, பேரளம்.
திருவாரூர் மாவட்டம் - 609608.
ஆசிரமத்தின் செயல்பாடுகள்
வேதாத்திரி மகரிஷி அவர்களின் சீடரும், பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியின் முன்னாள் முதல்வரும், பௌதீகத் துறைதலைவரும், இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் மகரிஷியின் தத்துவங்களை பல கருத்தரங்குகளில் சமர்ப்பித்தவருமான முனைவர் கோ. அழகர் இராமானுஜம் அவர்கள். தலைமையில் பேரளம் வேதாத்திரி மகரிஷி ஆசிரமம் சிறப்பாக இயங்கி வருகிறது.
ஆசிரமம் துவக்க விழா
28.03.2012 அன்று. பத்து ஏக்கர் நிலபரப்பில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் வந்திருந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொள்ள இவ்வாசிரமத் திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இத்துவக்க விழாவிற்கு ஆழியாறு அறிவுத்திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் பத்மபூஷன், முனைவர் அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்கள் தலைமை ஏற்றும், அன்றைய திருவாடுதுறை ஆதினம் அவர்கள் அருளாசி வழங்கி முன்னிலை வகித்தும் சிறப்பித்தனர். மகரிஷியின் அன்பு புதல்வி அருள்நிதி உமா அவர்கள் தனது தந்தையின் பெயரில் அமைந்துள்ள ஆசிரமத் துவக்கவிழாவில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள்.
உலகம் மேலும்மேலும் உய்வதற்காக உலகெங்கிலும் வந்த மகான்களின் வரிசையில் நம்மோடு நமக்கு அருகில் வாழ்ந்தவர் வேதாத்திரி மகரிஷி. இவர் தந்த ஞானமும், தவயோகமும், பயிற்சிகளும் ஒவ்வொரு மனிதனும் தன்னை உணர்ந்துய்ய மிகச் சிறந்த வழிமுறைகளாகும். மகரிஷி தந்த வழி முறைகளையும் மகத்துவத்தையும் உணர்ந்த உள்ளங்கள் அடிக்கடி கருத்தப் பரிவர்த்தனைகள் செய்யவும் மகரிஷியின் ஆன்மீக கருத்துக்களையும் ஆழமான சிந்தனைகளையும், பயிற்சி முறைகளையும் மக்களிடையே எடுத்து செல்லவும், நல்ல பல சமுக நல பணிகளை எடுத்து நடத்தவும் மக்களிடையே ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் வாழ்கின்ற ஆன்மீகத்தைப் பரப்பவும் ஆசிரமம் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. இந்த அருட்பணிகளோடு ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் ஏழை எளியோருக்கு உணவு அளித்தல், அவர்களுக்கு அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கச் செய்தல். ஏழை மாணவர்கள் தரமானக் கல்வியைப் பெறும் வாய்ப்பினை உருவாக்குதல், அனைத்து துறைகளிலும் புதிய சிந்தனையாளர்களை உருவாக்குதல் போன்ற நல்ல பல சமுதாயப் பணிகளையும் இந்த ஆசிரமம் எடுத்து செய்துகொண்டிருக்கிறது.
ஆசிரமத்தில் கிழ்கண்ட ஐந்து பிரிவுகள் செயல்படுகின்றன
1.வேதாத்திரியத் தத்துவ மையம்
மக்களின் உடல்நலம் ஓங்க உடற்பயிற்சியும், சீரான உயிர்ரோட்டத்திற்கு சித்தர்களின் காயகல்பப் பயிற்சிகளும், மனவளத்திற்கு தவமுறை பயிற்சிகளும் இறையியல் தத்துவங்களும் இம்மையத்தில் நடைபெற்று வருகின்றன.
2.வள்ளலார் தயவு மையம்
வள்ளலார் அவர்கள். 1869 ஆம் வருடத்தில் நிறுவிய வடலூர் தர்மசாலையில் அணையா அடுப்பிலிருந்து ஜோதியை எடுத்துவந்து நமது வள்ளலார் தயவு மையத்தில் அடுப்பு மூட்டப்பட்டது. தயவு மையத்தின் அன்னதான திட்டம் 2012 ல் ஆரம்பமாகியது. இத்திட்டத்தின் கீழ் தினசரி ஆதரவற்ற வயதான முதியவர்களுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது.
3.அன்னை தெரசா சேவை மையம்
ஆசிரமத்தை சுற்றியுள்ளையே கிராமத்து மக்களிடையே அவர்களின் ஆரோக்கியத்தை பெருக்க அவ்வப்போது இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
4.அம்பேத்கார் கல்வி மையம்
பள்ளி. கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களது உடல், மனவளத்திற்காகவும் சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன. குடும்பத்தார்களுக்கு அவர்களது வருமானத்தை முறையாக செலவு செய்து குடும்பத்திலுள்ள உறவுகளைப் பலப்படுத்தி, மனவளம் பெற்று இனிமையாக வாழ்வதற்கான மேம்பாட்டு பயிற்சிகள் தரப்படுகின்றன.
5.அப்துல்கலாம் அறிவியல் மையம்
வேதாத்திரியக் கருத்துக்களை உலக விஞ்ஞானிகளிடையே எடுத்துச் செல்ல அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. வேதாத்திரி மகரிஷி அவர்கள் உருவாக்கிய பல கருத்துக்களை ஆதாரமாக வைத்து, வேதாத்திரிய விஞ்ஞானம் என்ற ஒரு புதிய விஞ்ஞானத்தை உருவாக்குவதில் இம்மையம் முனைந்து செயல்பட்டு வருகிறது.
ஆசிரமத்திற்கு வருகைதரும் அன்பர்கள் தங்குவதற்கு அன்பர்களின் உதவியுடன் தங்கும் அறைகளும், வரும் அன்பர்கள் படித்துப் பயன்பெற்று மகிழ ஒரு நூலகமும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
வேதாத்திரி மகரிஷியின் பெயரில் அமைந்துள்ள இவ்வாசிரமத்தின் வளர்ச்சிக்காகவும். இதன் பணிகளுக்காவும் அன்பர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு எங்கள் வணக்கம் கலந்த நன்றி.
தங்களது பேராதரவும் அன்பும் என்றும் இவ்வாசிரமத்துடன் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறையருளையும், குருமகான் வேதாத்திரி மகரிஷியின் ஆசியருளையும் வேண்டுகிறோம்.
ஆசிரமத்தின் வங்கி விவரம்
SB/ Acc. Name:
Vethathiri Maharishi Foundation
Bank : Canara Bank (Peralam)
Acc No. 1261101068293
IFS Code : CNRB0001261
----------------------------------------------
தொடர்புக்கு
919626454204
919442705631
916382454200
----------------------------------------------
----------------------------------------------
Google Map
https://maps.app.goo.gl/H6gVcjJh4qk65Gte6
----------------------------------------------
Subscribe to our Youtube Channel
https://www.youtube.com/@alagarramanujam
----------------------------------------------
Join Our Faesbook :
https://www.facebook.com/alagarramqanujan
----------------------------------------------
https://www.instagram.com/alagarramanujan
----------------------------------------------
----------------------------------------------
Research website
----------------------------------------------
BlogSpot
https://alagarayya.blogspot.com
----------------------------------------------










